ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அச்சடிபிரம்பில் உள்ள பாலை ஐந்திணை மரபணு பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் 2வது மலர் கண்காட்சி துவக்க விழா நடந்ததது.
தோட்டக்கலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அச்சடிபிரம்பு பாலை ஐந்திணை பூங்காவில் மூன்று நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் துவக்கி வைத்தார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டு ராமநாதபுரம், ராமேஸ்வரம் பாரம்பரிய சின்னங்களை மலர்களால் காட்சிபடுத்தியிருந்தனர்.
பல்வேறு வகை வண்ண மலர்களை கொண்டு நினைவு சின்னங்கள், கங்காரு, டைனோசர், திமிங்கலம் மற்றும் முதலை உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். பாம்பன் ரயில் பாலம், பி.எஸ்.எல்.வி.,ராக்கெட், மயில், மீன் போன்றவை காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசனை பொருட்களை கொண்டு செய்யப்பட்ட திருவள்ளுவர், யானை போன்றவை பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜன.14 முதல் ஜன.16 வரை நடக்கும் மலர் கண்காட்சியை காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர், என தோட்டக்கலை துணை இயக்குநர் நாகராஜன் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன பாதுகாவலர் பகவன் ஜெகதீஷ் சுதாகர், பூங்கா உதவி இயக்குநர் புனித சுகன்யா, தோட்டக்கலை அலுவலர்கமலி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.