திருப்புவனம்,--திருப்புவனம் வட்டாரத்தில் கால்வாய் கரை தொடர்ந்து சேதமடைந்து வருவதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
5 கி.மீ., முதல் ஏழு கி.மீ தூரம் வரை கால்வாய்கள் நீளம் உள்ளது.இடையில் பாலங்கள், குறுகிய வளைவு உள்ளிட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க கரைகளில் முண்டுகற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட இந்த கற்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் வைகை ஆறு தண்ணீர் முழுமையாக கண்மாய்களுக்கு செல்வதில்லை. முண்டு கற்கள் சரிந்துஉள்ளதால் கரைகள் சேதமடைந்து வருகின்றன.
இதனை தவிர்க்க கால்வாய் கரைகளை பலப்படுத்தவும் பொதுப்பணித்துறையினர் கால்வாய் கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.