தேவகோட்டை---புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் நாகேந்திரன், மேலாண்மை குழு தலைவர் தேவி, ஊராட்சி துணை தலைவர் சரவணன், பங்கேற்றனர். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கவுன்சிலர் சிவகாமி தலைமையில் நடந்தது. தாளாளர் கணேசன் வரவேற்றார். மாணவர் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன.
ஆசிரியை தேவகி, நித்யா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். ஆசிரியை ஜான் திவ்யா நன்றி கூறினார்.