தேவகோட்டை,- தேவகோட்டை தாலுகா முப்பையூரில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடந்தது.
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
பாசன இணைப்பு கூட்டமைப்பின் மாநில செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் அய்யனார், மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய தலைவர் ஹானஸ்ட் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜூ உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.