மானாமதுரை,--மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆசிரியை ஆனந்தி துவக்கி வைத்தார்.
தாளாளர் ஜோசப் கிறிஸ்டிராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் அருள் ஜோஸ்பின் பெஸ்டி, முதல்வர்கள் ஜோதிலட்சுமி, வள்ளிமயில் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.சிறந்த படைப்புகளுக்கு தாளாளர் ஜோசப் கிறிஸ்டிராஜ் பரிசு வழங்கினார். பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.