இளையான்குடி,--இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தை பெரும்பச்சேரி ஊராட்சி மக்கள் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை வழங்காததை கண்டித்து முற்றுகையிட்டனர்.
இந்த ஒன்றிய 55 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பச்சேரியை சேர்ந்த ஏராளமானோருக்கு இத்திட்டத்தில் வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை வழங்கப்படாமல் 8 மாதமாக ஊராட்சி அலுவலகம் இழுத்தடிப்பு செய்வதை கண்டித்து இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.