சிவகங்கை,-சிவகங்கை நகராட்சியில் சுகாதார பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு நகராட்சி சேர்மன் துரைஆனந்த், மற்றும் துணை சேர்மன் கார்கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர், அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் ஊழியர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
* காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊராட்சித்தலைவர் மணிமுத்து தலைமையில் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, தலைமையாசிரியை பாண்டிசெல்வி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
சுகாதார பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
* திருப்புத்தூர் முத்தையா மெமோரியல் ட்ரஸ்ட் திறன் மேம்பாடு மையத்தில் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகரன், ஆசிரியர்கள்பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மா. ஆலம்பட்டி ஊஒ.நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஸ்ரீதர் ராவ் வரவேற்றார்.எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பொங்கலிட்டனர்.