காரைக்குடி,--பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, விதவிதமான சலங்கைகள் உட்பட பல்வேறு பொருட்களை கால்நடை வளர்ப்போர் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படும்.
மாட்டுப் பொங்கலான நாளை, மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் பூசி புதிய மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, மணிகள் கட்டப்படும். தொடர்ந்து விவசாயிகள், தன்னுடன் விவசாயத்திற்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் பொங்கல் வைத்து வழிபடுவர். இவ்வாண்டு வண்ண வண்ண நிறங்களில் விதவிதமான சலங்கைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சாக்கோட்டை, புதுவயல், பள்ளத்தூர் பகுதிகளில் கயறு, சலங்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.