சிங்கம்புணரி,--சிங்கம்புணரி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் அம்பலமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது.
துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் லட்சுமண ராஜு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எருமைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பொங்கல் பானை வடிவில் அமர்ந்து பொங்கலை கொண்டாடினர். தலைமையாசிரியர் கலைமதி ஆசிரியர்கள் கீதா, மேரி பிரபா, பிரேம்குமார் பங்கேற்றனர்.