திருப்புத்தூர்,--சிவகங்கை மாவட்டத்தில் பொங்கலை அடுத்து சிராவயலில் ஜன.17 ல் நடைபெறும் மஞ்சுவிரட்டு பிரபலமானது. அதற்கான ஏற்பாடு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமையில் நடக்கிறது.
கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறையினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காளைகள் பதிவு, மாடு பிடி வீரர்கள் பதிவும் நடந்து வருகிறது. இதுவரை 300 காளைகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி, ஏ.எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் சிராவயல் மஞ்சுவிரட்டு பொட்டலில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், 'ஒருங்கிணைப்பாளர்கள், மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மஞ்சுவிரட்டு சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.