திருப்புத்துார்,---திருப்புத்தூர் பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுப்பது மதுரையில் மட்டுமல்ல. காரைக்குடி பஸ் ஸ்டாண்டிலும் தொடர்கிறது.
பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்ப அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் பயணிகள் கடந்த சில நாட்களாகவே அதிகமாக காணப்படுகின்றனர். நேற்று காரைக்குடி புதிய பஸ்ஸ்டாண்டில் பட்டுக்கோட்டையிலிருந்து திருப்புத்தூர் வழியாக மதுரை செல்லும் அரசு பஸ்சில் முதியவர் உள்ளிட்ட திருப்புத்தூர் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
கண்டக்டர் அவர்களை இறக்கிவிட்டு பஸ் புறப்படும் போது தான் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார். அதை சக பயணிகள் கண்டித்துள்ளனர். முதியவரை உட்கார கோரினர்.
பின்னர் திருப்புத்தூர் பயணிகள் பஸ் புறப்படும் போது அனுமதிக்கப்பட்டு பயணிகள் நின்றவாறே பயணம் செய்துள்ளனர்.
திருப்புத்தூர் பயணிகளுக்கு இவ்வாறு மதுரை மாட்டுத்தாவணி மற்றும் காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் களில் அவமதிக்கப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும்.