திருவல்லிக்கேணி:சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி, 38. இவர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் வேலை பார்க்கிறார். நேற்று முன் தினம் கூட்டுறவு பண்டக சாலையில் கோமதியின் பணப்பை திருடப்பட்டது. அதில், 48 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். உடனடியாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார்.
கூட்டுறவு பண்டக சாலையில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து , பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அண்ணாசாலை, தயார் சாகிப் தெருவை சேர்ந்த முகமது சமீர் நிஜாமி, 50 என தெரிந்தது. அவரிடம் பணம் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.