தேவகோட்டை,---தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நடவடிக்கைக்குழு தேவகோட்டை வட்ட கிளை கூட்டம் தலைவர் மலைராஜன் தலைமையில் நடந்தது.
செயலாளர் பாலுச்சாமி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கவுரவ தலைவர் கோவிந்த ராமனுஜம், தலைவர் இருதயராஜன், செயலாளர் சுகுமாறன், பொருளாளர் ராமசாமி, அமைப்பு செயலாளர் பொன்துரைசிங்கம் , செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மின்வாரிய ஓய்வூதிய குழு செயலாளர் சீனிவாசன், கருவூல கணக்காளர் சுகுணா தேவி பேசினர்.
கூட்டத்தில் ஏழாவது ஊதியக்குழுவில் வழங்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல், மருத்துவ காப்பீட்டு அட்டையை விடுபட்ட அனைவருக்கும் வழங்குதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.