சென்னை:சென்னை, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 32, கோவளத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 29, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கவியரசு, 25. இவர்கள் உள்ளிட்ட 12 பேர், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, 12 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தாண்டில் இதுவரை 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணை பத்திரத்தை மீறி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.