வடபழநி:வடபழநி பெரியார் பாதை, 100 அடி சாலையில் உள்ள கடை முன், தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
நேற்று காலை, அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.
இறந்தவர், வடபழநி, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ், 63, எலக்ட்ரீஷியன் என்பதும், மூன்று ஆண்டுகளாக காச நோயால் அவதிப்பட்டு வந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.