கொடுங்கையூர்:வியாசர்பாடி, பி.வி.காலனி 1வது தெரு முதல் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை வரை, கடந்த 10ம் தேதி நள்ளிரவு, மாமூல் கிடைக்காத ஆத்திரத்தில், முகமூடி மற்றும் 'ஹெல்மெட்' அணிந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல், ஆறு பேரை சரமாரியாக வெட்டியது.
அதுமட்டுமல்லாமல், இரண்டு கார், தலா 4 'டாடா ஏஸ்' வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். மேலும் ஜெராக்ஸ் கடை, இரு மளிகைக் கடைகளை சூறையாடினர்.
இது குறித்து எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
இதில் ரவுடிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ஸ்ரீதர், 18 மற்றும் 17 வயது சிறுவனை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.