கொளத்துார்:கொளத்துார், ஹரிதாஸ் பிரதான சாலையில் வசித்தவர் சசிரேகா, 27; தனியார் பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகவில்லை.
வீட்டில் கடன் சுமை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிரேகா, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
பெற்றோர் புகாரின்படி, கொளத்துார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
Advertisement