தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பொங்கல் பண்டிகையொட்டி, சண்டை சேவல்களை தயார்படுத்தி வைத்துள்ளனர்.
தமிழகத்தில், பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவைகளுக்கு, எப்போதும் தனி மவுசு உண்டு.
தமிழகத்தில், சேவல்களின் கால்களில் கத்தி கட்டி, சண்டை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மறைமுகமாக பல பகுதிகளிலும், கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சேவல் சண்டைக்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், ஆண்டு முழுவதும், அடிக்கடி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஆலாந்துறை, நரசீபுரம், மத்வராயபுரம், நல்லூர்வயல், செம்மேடு, புள்ளாக்கவுண்டன்புதூர், தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், பேரூர், மத்திபாளையம் என, பல இடங்களிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, பல ரகங்களை கொண்ட சேவல்களை தயார்படுத்தியுள்ளனர்.