அன்னூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ ஒரு முழம் 200 ரூபாய்க்கும், முல்லை பூ ஒரு முழம் 100 ரூபாய்க்கும், ரோஜா ஒன்று முப்பது ரூபாய்க்கும், அன்னூரில் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'இதுவரை இல்லாத அளவு மல்லிகை பூ, ஒரு கிலோ சத்தியமங்கலம் மொத்த சந்தையில், 6,000 ரூபாய்க்கு இன்று (நேற்று) விற்பனையானது. முல்லை ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கும், ஜாதி முல்லை 1,700 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
விலை உயர்வு தவிர்க்க முடியாதது. வரத்து அதிகரித்தால் விலை குறையும் வாய்ப்புள்ளது' என்றனர்.