வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செஞ்சி:செஞ்சி அருகே 111 பம்பை இசைக் கலைஞர்கள் 5 மணி நேரம் தொடர்ந்து பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர்.
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 111 பம்பை இசைக் கலைஞர்கள் நோபல் உலக சாதனைக்காக 5 மணி நேரம் தொடர்ந்து பம்பை இசைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சத்தியமங்கலம் இசைக் கலைஞர் தணிகாசலம் தலைமை தாங்கினார்.
காலை 9:00 மணிக்கு துவங்கி மதியம் 2:03 மணி வரை தொடர்ந்து 5 மணிநேரம் 111 பம்பை இசைக் கலைஞர்கள் இடைவிடாது பம்பை இசைத்தனர்.நோபல் உலக சாதனை புத்தக நடுவர்கள் அரவிந்த் லட்சுமி நாராயணன், வினோத், பரணிதரன் ஆகியோர் சாதனைப் பதிவை கண்காணித்தனர்.
சாதனையின் முடிவில் பம்பை இசை கலைஞர்களுக்கு அமைச்சர் மஸ்தான் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.விழாவில் ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.