திருப்பூர் போக்குவரத்து போலீசார், நாட்டு நலப்பணித்திட்ட அலகு - 2 மாணவர்கள் சார்பில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா ஸ்டாப்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், உதயகுமார் ஆகியோர் பேசினர்.
மாணவர் செயலாளர்கள் அருள்குமார்,அரவிந்தன், ராஜா பிரபு, பூபதி ராஜா அடங்கிய குழுவினர் சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பதன் அவசியம் குறித்து நடனமாடி, நாடகம் அரங்கேற்றினர். போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.