அன்னுார்:பச்சாபாளையம் ஊராட்சி, தீத்தாம்பாளையத்தில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், அம்மன் சிலை சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, சிலையின் இரண்டு கைகள், உதடு, வேல் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தன. கோவில் கமிட்டியினர், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி மற்றும் அன்னுார் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.