கோவை:பாரதியார் பல்கலை சிண்டிகேட் கூட்டம் நாளை மறுநாளும், 27ம் தேதி செனட் கூட்டமும் நடைபெறவுள்ளது.
பல்கலையில் துணைவேந்தருக்கு இணையான அதிகாரம் கொண்டது சிண்டிகேட், செனட் குழுக்கள். பல்கலையின் முடிவுகள் எதுவாயினும், இக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.
நடைபெறவுள்ள, இக்கூட்டத்தில் பதவி உயர்வு முறைகேடு, நீண்ட நாட்களாக தொடரும் காலிப்பணியிடம், இலவச கல்வி அளிக்கப்பட்ட மாணவர்கள் விபரம், பல்வேறு பொறுப்புகள் ஒருவரிடம் ஒப்படைப்பு, நிலுவை வழக்குகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.