கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, வாகன சோதனைக்காக, தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மங்கலம் ஊராட்சி எல்லையில், ஆண்டிபாளையம் குளம் அருகே, மையத்தடுப்பு வைத்து செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், அகற்றப்பட்ட நிலையில், ஆண்டிபாளையம் குளம் அருகே தடுப்பு அகற்றப்படவில்லை. இருள்சூழ்ந்த பகுதியில், ரோட்டின் மையத்தில், தடுப்புகள் உள்ளதால், விபத்து அபாயம் உள்ளது. கனரக வாகனங்கள் கடந்து செல்ல தாமதம் ஏற்படுகிறது. இங்கு தடுப்புகளை அகற்ற, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உத்தரவிட வேண்டும்.