மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில், கொங்கு நாட்டின் பாரம்பரிய, தமிழர் குடும்ப பொங்கல் விழா, கொங்கு பேரவை சார்பில் நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் டி.எஸ்.பி., நாச்சிமுத்து தலைமை வகித்தார். விழாவில் சிரவை ஆதீனம் கவுமார மடாலய ராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது:
பொங்கல் விழாவில் தான், நமது பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள் நடைபெறும். ஆனால் இந்த விளையாட்டுகள் எல்லாம், இன்று காணாமல் போய்விட்டது.
வீடுகளில் குழந்தைகள் மொபைல் போனில் மூழ்கி விட்டனர். இளைஞர்கள் ஆங்கிலத்தில், தமிழர் திருநாள், பொங்கல் வாழ்த்துக்கள் என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். தமிழ் பேசுவோர், எழுதுவோர் குறைந்து வருகின்றனர்.
எனவே நமது வருங்கால சந்ததியினருக்கு, தமிழை சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோன்று பாரம்பரிய விளையாட்டுகளையும், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, குமரகுருபர சுவாமி பேசினார்.
Advertisement