கோவை:கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது.
கல்லுாரி நிறுவன தலைவர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வேளாண் பொருட்காட்சி, மாட்டு வண்டி, வில்லு வண்டி, ஏர்கலப்பை, குதிரை வண்டி மற்றும் நாட்டு மாடுகளின் அணிவகுப்பு நடந்தது. மாணவ, மாணவியர் அமைத்திருந்த பாரம்பரிய அங்காடிகளில், நுங்கு, இளநீர், கரும்புசாறு உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. கல்லுாரி துணைத்தலைவர்இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லுாரி முதல்வர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.