சென்னை:ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தை திமுக வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன் சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஏற்கனவே ஆதரவு அளித்திருந்தது. இந்த பேச்சு எழுந்ததில் இருந்தே திமுக எதிர்ப்பு கருத்தை தெரிவித்து கொண்டே வந்தது.இந்நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.