செயற்கை நுண்ணறிவு
உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. மனிதன் தானாக சிந்தித்து செயல்படுவது போன்று பல்வேறு கணினி புரோகிராம்களை உருவாக்கி, அவற்றை கணினியில் உள்ளீடு செய்து அதன் வழியாக ஒரு இயந்திரத்தை சிந்தித்து செயல்பட வைக்கும் முறை தான் செயற்கை நுண்ணறிவு. இதன்படி விஞ்ஞானிகள் கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மூளை போன்று புத்திசாலிதனமாக சிந்திக்க வைக்கும் விதத்தில் உருவாக்குகின்றனர்.
தகவல் சுரங்கம்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோத்தகிரி. இது கடல் மட்டத்திலிருந்து 6060 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தட்பவெட்ப நிலையும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் தட்பவெட்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் ''இந்தியாவின் சுவிட்சர்லாந்து'' என கோத்தகிரி அழைக்கப்படுகிறது. இங்கு தேயிலைத் தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளும் இங்கு விளைகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து 32 கி.மீ., தொலைவில் உள்ளது.