சென்னை, சென்னை, திருவல்லிக்கேணி, ஆதர்ஷ் பள்ளியில், 23வது பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இவற்றில், பெண்களுக்கான கபடி போட்டியில், கல்லுாரி அணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் பங்கேற்றன.
இதன் இறுதி போட்டிக்கு திருவல்லிக்கேணி நிலா கபடி குழுவும், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லுாரி அணியும் தகுதி பெற்றன. இதில், நிலா கபடி குழுவினர் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றனர். ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 'மேஜிக் பஸ்' கபடி குழு மூன்றாம் இடம் பெற்றது.
வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.