பெங்களூரு,-கர்நாடக மிருகக்காட்சி சாலைகளின் வருவாய், தொடர்ந்து அதிகரிக்கிறது. ஒன்பது மாதங்களில் 75.72 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து, கர்நாடக மிருகக்காட்சி சாலை வாரியம் வெளியிட்ட அறிக்கை:
கொரோனாவுக்கு பின், மிருகக்காட்சி சாலைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இவற்றின் பொருளாதாரம் மேம்படுகிறது. 2022 ஏப்ரல் 1 முதல், டிசம்பர் 31 வரை, 52 லட்சத்து 77 ஆயிரத்து 13 பேர் வருகை தந்தனர். மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு, 25.05 லட்சம் பேர் வருகை தந்தனர். 25.76 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
இங்கு டிசம்பரில் மட்டுமே 5.24 லட்சம் ரூபாய் வருகை தந்தனர். சமீப ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பெரிய சாதனையாகும்.
பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு, 16.12 லட்சம் பேர் வருகை தந்ததில், 42.60 கோடி ரூபாய்; ஷிவமொகா மிருகக்காட்சி சாலைக்கு, 2.41 லட்சம் பேர் வருகை தந்ததில், 3.22 கோடி ரூபாய் வருவாய் வசூலானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.