கோவிந்தராஜ்நகர், -கைது செய்ய சென்ற போலீசார் மீது, 'பெப்பர் ஸ்பிரே' அடித்து, தப்பியோடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, கோவிந்தராஜநகரைச் சேர்ந்த மனு, 30, பல குற்றங்களில் ஈடுபட்டவர். பல முறை சிறைக்கும் சென்று வந்தார். ரவுடி பட்டியலில் இருந்தார்.
கடந்த ஆண்டு பதிவான வழக்கொன்றில், தொடர்புள்ள இவரை விஜயநகர போலீசார் தேடி வந்தனர். மனு தலைமறைவாகதிரிந்தார்.
ஜனவரி 9ல், விஸ்வேஸ்வரய்யா லே -- அவுட்டின், மங்கனஹள்ளி ஏரி அருகில், அவர் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிந்தது. அவரை கைது செய்வதற்காக, எஸ்.ஐ., மவுனேஷ் படகி, தலைமை ஏட்டுகள் குமார், மஹா லிங்கையா சென்றனர்.
அப்போது போலீசார் முகத்தில், 'பெப்பர் ஸ்பிரே' தெளித்து விட்டு தப்பியோடினார். அவரை தேடி வந்த போலீசார், ரவுடி மனுவை நேற்று முன் தினம் கைது செய்தனர்.