நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், கண்ணம்மா பேட்டை உள்ளிட்ட 4 இடங்களில், மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் மருத்துவமனை செயல்படுகிறது.
இங்கு, நாய்கள், பூனைகள், பறவைகள் உள்ளிட்ட பிராணிகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசியும், அவற்றின் வளர்ப்பு குறித்து ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை மையங்களில், நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மட்டுமே, சிகிச்சை அளிக்கப்படுவதாக, பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். ஆனால் இங்கு, வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளுக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி கால்நடைத் துறை மருத்துவர்கள் கூறியதாவது:
சமீபகாலமாக மாநகரில், பறவைகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர், வெளிநாட்டு பறவை இனங்களையும் வளர்த்து வருகின்றனர்.
நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும், இம்மையங்களில் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்பெறலாம்.
இவ்வாறு கூறினர்.