கதக்-''அமைச்சர் முருகேஷ் நிரானி, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் இடையிலான பூசல், சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்,'' என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
கதக்கில் நேற்று அவர் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதிகளான முருகேஷ் நிரானி, பசனகவுடா பாட்டீல் எத்னால், மக்கள் சகிக்க முடியாத அளவுக்கு பேசுகின்றனர். கர்நாடக அரசியல் நடைமுறையை களங்கப்படுத்தினர். இதற்காக முதல்வர் உட்பட அமைச்சர், மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியல் ரீதியில் விமர்சிக்கும் பெயரில், அனைவரையும் அவமதிக்கும் வேலை நடக்கிறது. சான்ட்ரோ ரவி மட்டும் குற்றவாளி இல்லை.
இவரை பயன்படுத்தியதன் மூலம், மாநில நிர்வாகத்தை பலவீனமாக்கி உள்ளனர். அரசின் மதிப்பை குலைத்துள்ளனர். இவரை பயன்படுத்தி, ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.