திருவாலங்காடு,--திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் ஊராட்சிக்குட்பட்டது கணேச புரம் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருவாலங்காடு செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது.
இங்கு, இறந்தவர்களை அடக்கம் செய்ய, 2012 -- 13ம் ஆண்டு தமிழ்நாடு குக்கிராமங்கல் கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சுடுகாடில் எரிமேடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக பெய்த கன மழை மற்றும் பராமரிப்பின்மை காரணமாக எரிமேடையின் தரைப்பகுதி சேதமடைந்த நிலையில், ஆங்காங்கே செடிகள் முளைத்து அசுத்தமாக காணப்படுகின்றன.
இதனால், இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு லாயக்கற்ற நிலையில், எரிமேடை உள்ளது.
இந்நிலையில், பராமரிப்பின்றி காணப்படும் சுடுகாடு எரிமேடையை சீரமைக்க, திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.