அம்பத்துார், அம்பத்தூர், சண்முகபுரம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 39. கார் டிரைவர். இவரது மூத்த மகன் ஆதர்ஷ், 9 அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13 ம் தேதி மதியம் வீட்டு மாடியில் கரும்பை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வீட்டு மாடியில் சென்ற உயரழுத்த மின் வடத்தில், எதிர்பாராத விதமாக கரும்பு உரசியது. இதில் ஆதர்ஷ் மீது மின்சாரம் பாய்ந்து, தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்படி, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.