கும்மிடிப்பூண்டி--புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள மைதானத்தில் நடந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், இலங்கை தமிழர் முகாம் உட்பட எட்டு அணிகள் போட்டியிட்டன.
ஒய்.எம்.சி.ஏ., பொதுச் செயலர் ஆசிர் பாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இறுதிப் போட்டியில், இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த யெல்லோ எப்.சி., அணி, 4 -- 2 என்ற கோல் கணக்கில், கும்மிடிப்பூண்டி கோட் ரெட் எப்.சி., அணியை வீழ்த்தியது.
கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவகுமார் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் அஸ்வினி, ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன், கவரைப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஜெயகுமார், செயலர் பெனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு, கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.