மாதவரம், மாதவரம், தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 45. அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 11ம் தேதி இரவு, இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகையை திருடிச் சென்றனர். புகாரின் படி இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், கொருக்குப்பேட்டை ஜெர்சி நகர், பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர், வியாசர்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 15 வயதுள்ள மூன்று சிறுவர்களை நேற்று காலை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 15 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சென்னை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
மூன்று சிறுவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.