ஆர்.கே.பேட்டை,-பொதட்டூர்பேட்டை கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ளது ஆறுமுக சுவாமி மலைக்கோவில். உச்சிமலையில், விநாயகர் மற்றும் ஆறுமுக சுவாமி சன்னிதிகள் அமைந்து உள்ளன.
அடிவாரத்திலும், தனித்தனி கோவில்கள் உள்ளன. அடிவாரத்தில் உள்ள சுனையில் இருந்து கோவிலுக்கு தண்ணீர் வசதி உள்ளது.
இந்த கோவிலில் கடந்த நுாற்றாண்டில், 'மங்கலங்கிழார் சிறுவர் வானொலி மன்றம்' செயல்பட்டு வந்தது. மாலை நேரத்தில், சிறுவர்கள் இங்குள்ள படிப்பகத்தில், பாடங்களை படித்து வந்தனர்.
அவர்கள், தற்போது பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர். பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்பியுள்ளவர்கள், இன்று தங்களின் நண்பர்களுடன், தங்களின் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொள்ள காத்திருக்கின்றனர்.
மேலும், ஆறுமுக சுவாமி, விநாயகர், சிவன், பார்வதி என சுவாமி பரிவேட்டைக்கு புறப்படும் உற்சவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவிழாவில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.