ஆவடி, ஆவடி, அடுத்த கொள்ளுமேடு, ஒண்டித்தெருவை சேர்ந்தவர் பிரசாந்த், 22. பெயின்டர்.
இவர் தினமும் குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பாட்டி வசந்தாவிடம், 65 தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம், வழக்கம்போல, குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட போது, வசந்தா 'டேங்க் பேக்டரி' போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, விசாரணைக்கு பயந்து, பிரசாந்த் வீட்டின் கூரையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி 'டேங்க் பேக்டரி' போலீசார் விசாரிக்கின்றனர்.