தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, காணும் பொங்கலான இன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, நிர்வாகம் சார்பில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பூங்கா நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, இரண்டு முறை யானை குளிப்பதை பார்த்து ரசிக்கலாம். குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள, தனியாக புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர், உணவு விற்பனை நிலையங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.