கற்கள் பெயர்ந்த பிஞ்சிவாக்கம் சாலை

Added : ஜன 16, 2023 | |
Advertisement
பிஞ்சிவாக்கம்-கடம்பத்துார் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியிலிருந்து, அதிகத்துார் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையைப் பள்ளிச் செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி மணவாள நகர் வரை சென்று வருகின்றனர்.இந்த சாலை மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.இந்த சாலையை சீரமைக்க கோரி, பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா, கூடுதல்
 கற்கள் பெயர்ந்த பிஞ்சிவாக்கம் சாலை



பிஞ்சிவாக்கம்-கடம்பத்துார் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியிலிருந்து, அதிகத்துார் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையைப் பள்ளிச் செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி மணவாள நகர் வரை சென்று வருகின்றனர்.

இந்த சாலை மிகவும் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க கோரி, பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா, கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் கலெக்டர் ரிஷப், சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.

எனவே, மாவட்ட நிர்வாகம் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஒன்றிய சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X