ஊத்துக்கோட்டை,---பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம், நாட்நாச்சியம்மன் கோவில் அருகில் உள்ள நாட்டேரி நீர்வரத்து கால்வாயில், பாலத்தின் கீழே ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பென்னலுார்பேட்டை போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரித்ததில், இறந்தவர் போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 35, என்பது தெரியவந்தது. இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.