கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி அடுத்த, ராகவரெட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 34. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில், மர்ம நபர் ஒருவர் காய்கறி கடையின் பக்கவாட்டு ஓலை தடுப்புகளை பிரித்து உள்ளே சென்றார்.
கல்லாவில் வைத்திருந்த, 40 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார்.
கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு, கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement