பொன்னேரி--பொன்னேரி அடுத்த, ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 35. இவர், கடந்த, 14ம் தேதி, நண்பர்களுடன் பொன்னேரி அடுத்த, பெரும்பேடு பகுதியில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.
விளையாட்டில் ஈடுபட்டிருந்த மனோஜ்குமாருக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் நண்பர்களிடம் தெரிவித்தார். உடனடியாக, நண்பர்கள் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், மனோஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து மனோஜ்குமாரின் தாய் சரஸ்வதி அளித்த புகாரை யடுத்து, பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.