திருப்பூர்;திருப்பூரில், சவரத் தொழிலாளர்கள் கூட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம், காங்கயம் ரோடு கிளை சார்பில், கிளைகளின் பொது உறுப்பினர்கள் கூட்டம் கிளை தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் செல்வம் வரவேற்றார்.
கூட்டத்தில், மாநகர தலைவர் ஜீவமதி பங்கேற்று, கிளை உறுப்பினர்களுக்கு நல வாரிய அடையாள அட்டையும், பொங்கல் பரிசுகளையும் வழங்கினர். மாநகர அறக்கட்டளை பொருளாளர் ராமசாமி, மாநகர சங்க செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் செல்வராஜ், அறக்கட்டளை தலைவர் சக்திவேல், செயலாளர் வடிவேல், துணை நிர்வாகிகள் வெள்ளைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.