போத்தனூர்:போத்தனூர் அடுத்த மேட்டூரிலுள்ள தமிழ் மன்றத்தின், 33ம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று மன்ற தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது,
இதனையொட்டி சிறுவர், சிறுமியருக்கு ஓட்டம், லெமன் ஸ்பூன் ஓட்டம், நடனம், இசை நாற்காலி, உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பெரியவர்களுக்கு இசை நாற்காலி, உறியடித்தல், லெமன் ஸ்பூன் ஓட்டம் ஆகியவை நடந்தன.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.