ஒற்றுமை பொங்கல்!

Added : ஜன 16, 2023 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து, 'திருப்பூர் பொங்கல் திருவிழா,' நிகழ்ச்சியை கடந்த 15ம் தேதி முதல் நடத்தி வருகின்றன.நொய்யல் ஆற்றின் கரையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இத்திருவிழா இன்று நிறைவடையவுள்ளது.நிறைவு நாளான இன்று காலை 6:30 மணிக்கு மூவாயிரம் குடும்பங்கள் ஒன்றிணைந்து
 ஒற்றுமை பொங்கல்!

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து, 'திருப்பூர் பொங்கல் திருவிழா,' நிகழ்ச்சியை கடந்த 15ம் தேதி முதல் நடத்தி வருகின்றன.

நொய்யல் ஆற்றின் கரையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இத்திருவிழா இன்று நிறைவடையவுள்ளது.

நிறைவு நாளான இன்று காலை 6:30 மணிக்கு மூவாயிரம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாடும் ஹிந்துக்கள் மட்டுமின்றி, கிறிஸ்துவர், இஸ்லாமியர், ஜெயின் உள்ளிட்ட மதத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் என பல தரப்பினரும் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தவுள்ளனர்.இதற்காக பொங்கல் வைக்கும் குடும்பத்தினருக்கு புத்தாடை, பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் அனைத்தும், வார்டு வாரியாக வழங்கப்பட்டது. பொங்கல் வைப்பதற்காக அடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அடுப்புக்கும் தலா ஆறு செங்கல் என்றளவில் செங்கல், விறகு உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.நொய்யல் ஆற்றின் தென்புற கரையில் அடுப்புகள் அமைக்கப்பட்டு, ரோட்டோரம் பேரி கார்டுகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கலக்கல் நிகழ்ச்சி



நேற்று மாலை, கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம், ஜமீன் கோடங்கிபட்டி கலைமாமணி குமார் ராமன் கலைக்குழுவினரின் தேவராட்டம், கர்நாடகா மலையக மக்களின் 'டொல்லு குனிதா' மற்றும் பட்டாம்பூச்சிகள் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் இசை நிகழ்ச்சி என, கலைக்குழுவினர்கள் கலக்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X