கோவை:கோவை புரோசோன் மாலில், கடந்த நான்கு நாட்கள் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சரவணம்பட்டியில் உள்ள புரோசோன் மாலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜன., 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை, 'எண்டு ஆப் சீசன் சேல்' தள்ளுபடி விற்பனை மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையடித்தல், விளையாட்டு போட்டிகள் நடந்தன.
புரோசோன் மாலின் தலைமை மேலாளர் பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி ஆகியோர் இத்தகவலை தெரிவித்தனர்.