பேரூர்:மத்திபாளையத்தில், சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொங்கல் பண்டிகையையொட்டி, மத்திபாளையத்தில் சட்டவிரோதமாக, கத்தி கட்டி சேவல் சண்டை நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்றபோது, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மத்திபாளையத்தை சேர்ந்த மாறன், 50, பழனிசாமி, 43, சக்திவேல், 36, கார்த்திக்,30 ஆகிய நால்வரையும், பேரூர் போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 2 சேவல் மற்றும் 1,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.