அவிநாசி;திருவள்ளூர் தினத்தில் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற விதியை மீறி அவிநாசியில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடைபெற்றது.
திருவள்ளுவர் தினம், மிலாடி நபி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் இறைச்சிக் கடைகள் செயல் படக்கூடாது என தமிழக அரசு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் தினமான நேற்று அவிநாசியில் அனைத்து வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது.
இது குறித்து இறைச்சிக் கடைக்காரர்களிடம் கேட்டபோது, 'தங்களுக்கு பேரூராட்சியில் இருந்து கடைகளை மூட சொல்லி நோட்டீஸ் வழங்கப்படவில்லை,' என்றனர்.